தவறான பாதையில் செல்கிறோம்: பொதுமக்களை எச்சரித்த பிரான்ஸ் பிரதமர்!!

334

பிரான்சில்……

பிரான்சில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களை எச்சரித்த பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், நாடு கடந்த இரண்டு வாரமாக தவறான பாதையில் பயணித்திருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

திங்கள்கிழமை முதல் புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1,397 என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதினான்கு பேர் இறந்துள்ளனர்.

இதனிடையே, 5,000 க்கும் மேற்பட்டோர் கூடும் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை அக்டோபர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மாஸ்க் அணிய வேண்டிய தேவையை மேலும் நீட்டிக்குமாறு உள்ளூர் அதிகாரிகளிடம் பிரதமர் காஸ்டெக்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.


பொது போக்குவரத்து, கடைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட உட்புற இடங்களில் நாடு முழுவதும் மாஸ்க் அணிவது ஏற்கனவே கட்டாயமாகும்.

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொரோனா பரவலின் கடுமையான தாக்கத்தை அனுபவித்த பிரான்சில் ஏற்கனவே 30,000 க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் இறந்துள்ளனர்.

திங்கள்கிழமை முதல் கூடுதலாக 14 பேர் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் பிரேசில் நாடுகளில் கொரோனாவால் 100,000 எண்ணிக்கைக்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ள நிலையில்,

பிரான்ஸ் கொரோனா இறப்பு எண்ணிக்கையில் உலகின் ஏழாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.