தாய்லாந்தில் காதலியுடன் பதுங்கி இருந்த பிரபல தாதா அதிரடி கைது!!

98

உத்தரபிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் மாஃபியா தலைவரான பிரபல தாதா ரவி கானா மற்றும் அவரது காதலி காஜல் ஜா ஆகியோர் மீது பல கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தலைமறைவாக இருந்த இருவருக்கு எதிராக லுக்அவுட் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவர்களை நொய்டா மற்றும் உளவுத்துறை போலீசார் பல நாடுகளில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் தாய்லாந்தில் பதுங்கியிருந்த இருவரையும் சர்வதேச போலீசாரின் உதவியுடன் இந்திய போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்கிருந்து அழைத்து வர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

எனைடா காவல்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரபல மாஃபியா கும்பல் தலைவன் ரவி கானா மீது ஜனவரி 1 ஆம் தேதி ஒரு பெண் பாலியல் பலாத்கார புகாரை அளித்தார். அதில், ரவி கானா மற்றும் 5 பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சில குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், ரவி கானா மட்டும் தலைமறைவாக இருந்தார். ஏற்கனவே 10 கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள அவரை பலாத்கார வழக்கின் அடிப்படையில் தேடி வந்தோம்.


முதல்கட்ட விசாரணையில் அவர் தனது காதலி காஜல் ஜாவுடன் வௌிநாட்டுக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது. எனவே அவர்கள் இருவருக்கும் எதிராக லுக்அவுட் மற்றும் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

நொய்டாவைச் சேர்ந்த ஆலிஸ் கவுதம், ரவி கானாவின் புத்த நகர், புலந்த்ஷாஹர் மற்றும் டெல்லியில் உள்ள ரூ.350 கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கு சீல் வைத்துள்ளார். டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் அவரது காதலி பெயரில் ரூ.80 கோடி மதிப்பிலான பங்களாவுக்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தாய்லாந்தில் காதலியுடன் பதுங்கியிருந்த ரவி கானாவை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இருவரையும் இந்தியா அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.