திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பு… பழம் கொடுக்க வந்தபோது யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!!

229

திருச்செந்தூர் கோயிலில் உள்ள தெய்வானை யானை மிதித்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள முருகன் கோயில் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடுகளில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது.

இந்த கோயிலில் 25 வயது மதிக்கத்தக்க வகையில் தெய்வானை யானை வளர்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணியளவில் தெய்வானை யானைக்கு பழம் கொடுப்பதற்காக பாகன் உதயா வந்துள்ளார். அவருடன், உறவினரான சிசுபாலன் என்பவரும் இருந்துள்ளார்.

அப்போது, இரண்டு போரையும் தெய்வானை யானை மிதித்ததாக கூறப்படுகிறது. இதில், சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, இருவரையும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் திருச்செந்தூர் கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.