திருநங்கையை தான் திருமணம் செய்வேன் அடம் பிடித்த மகன் : விரக்தியில் பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!!

197

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பா ராயுடு (வயது 45). இவரது மனைவி சரஸ்வதி (வயது 38) மற்றும் இவர்களது மகன் சுனில் குமார் (வயது 24) ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக திருநங்கை ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

அவரது பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடினர். ஆனால், திருமணம் செய்து கொண்டால் திருநங்கையைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்பதில் சுனில் குமார் உறுதியாக இருந்தார்.

இதனால், இவருக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்னையில் சுனில்குமார் சமீபத்தில் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் சுனில் குமார் திருநங்கையின் பணம் ரூ. 1.5 லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது. பணத்தை திருப்பி தருமாறு திருநங்கைகள் அவரது பெற்றோரை துன்புறுத்தி வந்தனர்.

பொது இடங்களில் திருநங்கைகளால் அவமானப்படுத்தப்பட்டதால் அவர்கள் மன வேதனை அடைந்தனர். இதையடுத்து விரக்தியில் இருந்த தம்பதியினர் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கையை திருமணம் செய்ய மகன் முயன்றதால் மனம் உடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.