திருமண நிகழ்வில் திடீரென பலியான இளம் பெண்!!

57

உறவினரின் திருமணத்தில் நடனமாடும்போது இளம் பெண் ஒருவர் திடீரென மரணமடைந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் விதிஷாவில் நடந்த ஒரு திருமண விழாவில் இந்த துரதிர்ஷ்டவசமான இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 23 வயது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இளம் பெண் மாரடைப்பால் இறந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும் முன்னதாக குறித்த பெண்ணின் தம்பி ஒருவரும் தனது12 வயதில் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.