இத்தாலியில்..
அலெசியா நெபோஸோ (21) எனும் இத்தாலியைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர், தனது நீண்ட நாள் காதலரான மரியோ லுச்சேசியை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். ஆனால், அவர் தனது மார்பகங்கள் சிறிதாக இருப்பதாக எண்ணி கவலையுற்றுள்ளார்.
மேலும், திருமணத்தன்று Low-cut திருமண உடையில் தோன்ற வேண்டும் என்பது அலெசியாவின் விருப்பமாக இருந்துள்ளது. இதனால் அவர் மார்பக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதன் பின்னர் சில நாட்களில் அலெசியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.
அவருக்கு அதிக காய்ச்சல், உடல் சோர்வு, இருமல் மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகள் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் பரிதாபமாக உயிரிழந்தார். அலெசியாவின் குடும்பத்தினர் இதுதொடர்பாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.