திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற தம்பதி! அங்கு உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்த கண்ணீர் காட்சி!!

1386

தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச் சேர்ந்த ராஜூ என்பவரது மகள் தேவி (20) என்பவருக்கும் கடந்த 8 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஞாயிறு அன்று தேவியும், அவரது கணவரும், தாராபுரத்தில் உள்ள அவரது அக்கா அழகேஸ்வரி வீட்டுக்கு, திருமண விருந்துக்கு சென்றனர்.

புதுமண தம்பதியருக்கு வீட்டில் உணவு தயார் செய்து கொண்டிருந்தனர். அப்போது, தேவி தனியறைக்கு சென்ற நிலையில் அங்கு அவரை அழைக்க முற்பட்ட போது, அவர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தார்.


இதை பார்த்து அதிர்ச்சியடைந்து அழுத அவர் குடும்பத்தினர், தாராபுரம் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த பொலிசார் பிரேதத்தை கைப்பற்றி, மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு வழக்குப்பதிவு செய்தனர். திருமணமாகி,

நான்கு நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.