திருமணமான ஆறே மாதத்தில் சோகம்.. தல பொங்கலில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

5

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தைச் சேர்ந்த சேர்மக்கனி (30), இவர் தினக்கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி சந்திரகனி (23). 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

சேர்மக்கனி வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். நேற்று காலை, வழக்கம் போல் சேர்மக்கனி வேலைக்குச் சென்றிருந்தார்.  பின்னர், வீட்டில் இருந்த ஜோதி சந்திரகனி, தனது மின்விசிறியில் சேலையால் தூக்கிவிட்டு திடீரென உயிரிழந்தார்.

அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இறந்த ஜோதி சந்திரகனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. ஜோதி சந்திரகனி திருமணமான 6 மாதங்களுக்குள் இறந்துவிட்டதால், தென்காசி உதவி கலெக்டர் லாவண்யா விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.