திருமணம் நடக்க வெறும் ஒரு நிமிஷம்தான்.. திடீரென பேனருடன் வந்த 7 முன்னாள் காதலிகள் : பின்னர் என்ன நடந்தது தெரியுமா?

2662

சீனாவில்…

அந்த காலத்தில் எல்லாம் ஒரு ஆண்மகன் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்; திருமணம் செய்துகொள்ளாமலும் வாழலாம் என்றெல்லாம் எழுதப்படாத சட்டம் இருந்தது. காலப்போக்கில் பஞ்சாயத்து உள்ளிட்ட விவகாரங்கள் இதனை கண்டிக்க தொடங்கியது. தற்போதுள்ள காலகட்டத்தில் சட்டங்கள் இதனை ஒரு பெரிய குற்றமாகவே பார்க்கிறது.

இருப்பினும் திருமணத்திற்கு முன்பு ஒரு ஆணும் பெண்ணும் காதலித்து பழகி, பின்னர் அந்த ஆணோ/ பெண்ணோ பிரிந்தால் அதற்கு பாதிக்கப்பட்டவர் யாரும் புகார் தெரிவிப்பதில்லை. ஆனால் ஒரு பெண்ணோ/ ஆணோ மன ரீதியாக இந்த காதல் தோல்வியால் பாதிப்படைந்தால் அதற்கு பாதிக்கப்பட்டவர்கள் கேஸ் கொடுக்கலாம்.

இருந்த போதிலும் நம்மில் பலரும் அப்படி செய்வதில்லை. தொடர்ந்து அவர்கள் விட்டு சென்றால் நாமும் சில நாட்கள் அவர்களது நினைப்பில் இருந்துவிட்டு அதிலிருந்து கடினப்பட்டு மீண்டு நமது வாழ்க்கையை தொடர தொடங்கிவிடுவோம்; இன்னும் சிலர் மனதளவில் பலவீனமாக இருந்தால் ஒன்று அவர்களை பழி வாங்க எண்ணுவர் அல்லது தற்கொலை செய்துகொள்வர்.


இன்னும் சில ஆண்கள்/ பெண்கள் காதலிப்பதை ஒரு பொழுதுபோக்காகவே எண்ணுவர். ஒருவரை காதலிப்பது, அவர்கள் சலித்து விட்டால் அவருடன் பிரேக் அப் செய்துவிட்டு மற்றொருவரை காதலிப்பது. அவர்களும் போர் அடித்து விட்டால் வேறொருவரை காதலிப்பது இது போன்று செய்து வருவர். இவர்களை Play Boy என்று அழைப்பர்.

இவ்வாறு செய்பவர்களை பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள் திருமணம் செய்யும் நாளன்று சென்று தகராறு செய்ய வேண்டும் என்று தோன்றினாலும் அதனை செய்வதில்லை. ஆனால் இங்கே ஒரு மணமகனின் முன்னாள் காதலிகள், அவரது திருமணத்தின்போது வந்ததால் அவரது திருமணம் நின்றுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவின் யுனான் மாகாணத்தைச் சேர்ந்தவர் சென். இவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. திருமணம் செய்துகொள்ள மணமகன் மற்றும் மணமகள் தயார் நிலையில் இருந்துள்ளனர்.

அப்போது திடீரென்று 7 பேர் கொண்ட பெண்கள் தங்கள் கையில் கட் அவுட் வைத்துகொண்டு உள்ளே சென்றுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவர்களிடம் என்ன ஏது என்று விசாரித்தனர். அப்போது அவர்கள் அனைவரும் மணமகனின் முன்னாள் காதலிகள் என்று தெரியவந்தது.

அதோடு இந்த திருமணம் நடந்தால் நாங்கள் மாப்பிள்ளையை அழித்து விடுவோம் என்றும், அவர் எங்கள் வாழ்க்கையோடு விளையாடிவிட்டார் என்றும் கடுமையாக கோஷமிட்டனர். ஆரம்பத்தில் இந்த பெண்கள் சொன்னதை உறவினர்கள் யாரும் நம்பவில்லை. இறுதியில் இதுகுறித்து மணமகனிடம் பெண் வீட்டார் விசாரித்தனர்.

தனது முன்னாள் காதலிகளின் இந்த நடவடிக்கையால் மணமகன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றுள்ளார். இருப்பினும் உறவினர்கள் மாறி மாறி விசாரித்தனர். அப்போது இவர்கள் அனைவரும் தனது காதலி என்ற உண்மையை ஒப்புக்கொண்டார். மேலும் இது குறித்து திருமணத்திற்கு முன்பு மணமகளுக்கு தெரிவிக்கவில்லை என்றும் கூறினார்.

தொடர்ந்து பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களிடமும் அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டார். அதோடு தான் இளைமையில் தெரியாமல் தவறு செய்துவிட்டதாகவும், இதுபோன்ற பெண்களை மனதளவில் காயப்படுத்தியதாகவும் அதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார். இருப்பினும் அவர்கள் அனைவரும் அவர் விட்டு சென்றதற்கான காரணம் குறித்து எதுவும் கூறவில்லை.