திரும்பிய பக்கம் எல்லாம் சடலங்கள்… எங்கும் மரணம் ஓலம்! நிலைகுலைந்து கிடக்கும் பெய்ரூட்டில் எடுக்கப்பட்ட நெஞ்சை உலுக்கும் புகைப்படம்!!

349

பெய்ரூட்டில் நடந்த துறை வெடி விபத்து எப்படி ஒரு கோரமான மற்றும் பயங்கரமான வெடி விபத்து என்பதை நிரூபிக்கும் வகையில் ராய்ட்டஸ் ஊடகத்தின் பத்திரிக்கையாளர் எடுத்திருக்கும் புகைப்படம் விளக்குகிறது.

லெபானின் தலைநகர் பெய்ரூட்டில் இருக்கும் துறைமுகம் ஒன்றில் அம்மோனியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட விபத்து காரணமாக, அந்த துறைமுகமே இருக்கும் இடம் இல்லாத அளவிற்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஆனால், இதுவரை இந்த வெடிவிபத்திற்கு என்ன காரணம் என்பது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வர் அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த வெடி விபத்து காரணமாக பெய்ரூட் 40 ஆண்டுகள் பொருளாதாரத்தில் பின்னோக்கின் சென்றுள்ளது. அதில் இருந்து மீள இன்னும் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது பிரபல ஆங்கில ஊடகமான REUTERS-ன் கமெரா மேன் Mohamed Azakir உடனடியாக சம்பவம் பகுதிக்கு விரைந்துள்ளார்.


அப்போது அவர் திரும்பிய இடமெல்லாம் சடலங்கள், இறந்தவர்களின் சடலத்தைப் பார்த்து அங்கிருந்த மக்கள் அலறிக் கொண்டிருக்கின்றனர். அந்த சூழ்நிலையில் தான் இவர் வாகனத்திற்கு அடியில் காயங்களுடன், முகத்த்ல் இரத்தக் கரையுடன் சிக்கிய நபரை பார்க்கிறார்.

அந்த நபர் கண்கள் இரத்தத்தால் சிவந்திருக்கிறது. பார்க்கும் போதே அவர் இறந்துவிட்டதாக Mohamed Azakir நினைக்க, ஆனால் அந்த நபர் திடீரென்று கைகளை அசைத்து உதவி கேட்டுள்ளார்.

இதனால் Mohamed Azakir அந்த நேரத்தில் அங்கிருந்த சில மீட்பாளர்களை அழைத்து சென்று அங்கு அவரை மீட்பதற்கு உதவியுள்ளார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக ஸ்ட்ரச்சர் ஒன்றில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், அவரலால் அந்த நபர் குறித்து எந்த ஒரு விவரங்களையும் பெறவில்லை. ஆனால் அதை அவர் புகைப்படமாக எடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் இந்த வெடி விபத்து எந்தளவிற்கு பயங்கரமானதாக இருந்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

மேலும் இந்த வெடி விபத்து காரணமாக பெய்ரூட்டில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 5000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுள்ளனர். 100- பேரின் நிலை என்ன என்று கூட தெரியவில்லை. அதுமட்டுமின்றி மூன்று லட்சம் பேர் வீடற்றவர்களாக உள்ளன.

இதனால் தங்கள் நாட்டில் ஊழல் நிறை ஆட்சி நடப்பதாக கூறி, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் பெய்ரூட்டிற்கு வந்த போது, அங்கிருந்த மக்கள் சிலர், எங்கள் அரசுக்கு பணம் கொடுத்துவிடாதீர்கள், நீங்களே உதவுங்கள் என்று கேட்டது நினைவுகூரத்தக்கது.