தமிழ்ச்செல்வன்….
துபாயில் மர்மமாக இறந்த தனது மகனின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த தந்தை, ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
தமிழக மாவட்டம் ராமநாதபுரத்தில், எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் (26).
பட்டதாரியான இவர், 2019-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் திகதி துபாய்க்குச் சென்று சூப்பர் மார்க் கெட்டில் பணிபுரிந்து வந்தார்.
2 ஆண்டுகளுக்கான விசா முடிய உள்ள நிலையில், 2 நாட்களில் ஊர் திரும்ப உள்ளதாக தனது குடுபத்தினருக்கு போனில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தமிழ்ச் செல்வன் இறந்து விட்டதாக, அங்கு பணியாற்றும் உறவினர் மூலம் சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து உறவினர்களுடன் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் வந்த சேகர், தனது மகன் சாவில் மர்மம் உள்ள தாகக் கூறி, அவரது உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்துள்ளார்.