தூங்க மறுத்த கைக்குழந்தையை கடித்துவைத்த பணிப்பெண் செய்த செயல் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

384

சிங்கப்பூரில்…..

சிங்கப்பூரில் ஒருபெண் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். பின்னர் அந்த குழந்தைகளை கவனித்துக்கொள்ள 33 வயதான மசிதா கொரிடாதுரோச்மா என்ற இளம்பெண் பணியமர்த்தப்பட்டார்.

இந்தோனேசியாவை சேர்ந்த மசிதா, 2021 ஆம் ஆண்டு முதல் பணியமர்த்தப்பட்டார். அவரது முதன்மைக் கடமைகளில் அவரது முதலாளியின் இரட்டைக் குழந்தைகளைப் பராமரிப்பது, பின்னர் வீட்டு வேலைகளும் அடங்கும்.

இந்தநிலையில் கடந்த ஆண்டு மே 26, மசிதாவின் முதலாளி தனது மூத்த மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில் 14 மாத வயதுடைய இரட்டைக் குழந்தைகளுடன் பணிப்பெண் வீட்டில் இருந்தார். அப்போதுதான் பணிப்பெண் குழந்தைகளை தூங்க வைக்க முயன்றார்.


 இருப்பினும், சுமார் அரை மணி நேரம் போராட்டத்திற்குப் பின்னரும், ஒரு குழந்தை தூங்க மறுத்ததால் மசிதா அந்த குழந்தையின் கையில் கடித்து வைத்தார். குழந்தையின் தாய் வீடு திரும்பியதும், குழந்தையின் கையில் கடித்த அடையாளத்தின் வடிவத்தில் காயம் இருப்பதை தாய் பார்த்தார்.

இது குறித்து கேட்டபோது முதலில் மறுத்த மசிதா, பின்னர் ஒப்புக் கொண்டார். பணிப்பெண் மசிதா தனது முதலாளியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார், ஆனால் குழந்தையின் தாய் இந்த விஷயத்தை போலீசில் புகார் செய்தார்.

இது தொடர்பான வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர் கைக்குழந்தை என்றும், மசிதா வேண்டுமென்றே காயப்படுத்தினார் என்றும் தாயாரின் வழக்கறிஞர் வாதாடினார்.

அதைத் தொடர்ந்து மாவட்ட நீதிபதி, குழந்தையை கடித்ததால் பணிப்பெண்ணுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.