தூங்கிய நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக மரணம்!!

104

கர்நாடகாவில் சிலிண்டர் கசிவால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, ஒரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்திய மாநிலம் கர்நாடகாவில் உள்ள மைசூரில் வசித்து வந்தவர் குமாரசாமி (45). இவரது மனைவி மஞ்சுளா (39), மகள்கள் அர்ச்சனா (19) மற்றும் சுவாதி (17).

சலவை தொழில் செய்து வந்த குமாரசாமி சிக்கமகளுருவின் கடூரைச் சேர்ந்தர் ஆவார். பல ஆண்டுகளுக்கு முன் மைசூரின் யரனஹள்ளியில் குடியேறினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரசாமியின் வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளனர். ஆனால் மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனைவரும் பேச்சுமூச்சு இல்லாமல் கிடந்துள்ளனர்.


உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது குமாரசாமியின் குடும்பத்தினர் உயிரிழந்த்தும், வீட்டில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டிருந்ததும் தெரிய வந்தது.

குடும்பத்தினர் அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக தெரிவித்த பொலிஸார், அவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதற்கிடையில் குடும்பத்தினர் உயிரிழந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.