அமெரிக்கா..
அமெரிக்க நடிகையும், கோடீஸ்வரியுமான அலெக்சாண்ட்ரா டாடரியோ தேனிலவு சென்ற இடத்தில் சாலையில் மேற்கொண்ட மனிதநேய செயல் மக்களின் மனதை வென்றுள்ளது.
36 வயதான அலெக்சாண்ட்ராவின் சொத்து மதிப்பு $8 மில்லியன், ஆண்ட்ரூ என்ற 53 வயது நபரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு புதுமணத்தம்பதி தேனிலவு சென்றனர்.
அங்குள்ள ஒரு பரபரப்பான சாலையில் வாகனங்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தன.
அப்போது சாலைக்கு நடுவே ஆமை ஒன்று கிடந்தது, எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் ஆமை மீது ஏறி அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை இருந்தது.
இதை பார்த்த அலெக்சாண்ட்ரா காரில் இருந்து இறங்கி சென்று ஆமையை கையில் தூக்கினார். பின்னர் மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு இடத்தில் அதை கொண்டு போய் இறக்கி கீழே விட்டார்.
இது தொடர்பான வீடியோ உலகளவில் வைரலாகியுள்ளது. இதை பார்த்த பலரும் பணமும், புகழும் பெரியளவில் அலெக்சாண்ட்ராவிடம் இருக்கிறது, ஆனால் அதை விட மனிதநேயம் அதிகம் அவரிடம் உள்ளது என பதிவிட்டுள்ளனர்.
View this post on Instagram