நகரும் நடைபாதையில் சிக்கி காலை இழந்த பெண்.. வைரலாகும் வீடியோ!!

994

நகரும் நடைபாதையில்..

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விமானநிலையங்களில் நாகரீகத்தின் உச்சத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதை விமான நிலையத்தில் நகரும் நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் எதிர்பாராதவிதமாக பெண் பயணி ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது. இதனால் அவரது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பாங்காக்கின் டான் முயாங் விமான நிலையத்தில் இருந்து ஒரு பெண் தெற்கு நாகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமான நிலையத்தின் டெர்மினல் 2க்கு செல்ல இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பெண் பயணியின் கால் நகரும் படிக்கட்டில் சிக்கிக் கொண்டது. இயந்திர படிக்கட்டுகள் இயக்கத்தில் இருந்ததால் அவரால் காலை வெளியே எடுக்க முடியவில்லை.

அவரது மூட்டு தசை, தசைநார் மற்றும் எலும்பு வரை சென்று விட்டது. இதனால் பெண் பயணி கத்தி கூச்சலிட்டார். சக பயணிகள், அங்கு பணியில் இருந்த விமான நிலைய ஊழியர்கள் அவசரகால பட்டனை அணைக்க தடுமாறினர். சிறிது நேரத்தில் அப்பகுதிக்கு மருத்துவக் குழு விரைந்து அப்பெண்ணை மீட்டு விட்டது. ஆனால் அதற்குள் அவரது கால் துண்டானது.


மேலும் காலை இணைக்க முடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அந்த பெண் வேறு மருத்துவமனைக்கு தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் விபத்திற்கான காரணத்தை கண்டறிய விமான நிலைய அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.