“நடிகை கிம் கர்தாஷியன் மாதிரி மாறனும்” ரூ.48 லட்சம் செலவுல 15 ஆபரேஷன் செய்துகொண்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

437

அமெரிக்கா….

பிரபல நடிகை கிம் கர்தாஷியன் போலவே இருக்க வேண்டும் என லட்ச கணக்கில் செலவு செய்த இளம்பெண்ணுக்கு புதிய சிக்கல் முளைத்திருக்கிறது. இதனிடையே அவரது புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த மாடலும், நடிகையுமான கிம் கர்தாஷியனுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனாலேயே சமூக வலை தளங்களில் கிம் வெளியிடும் புகைப்படங்கள் கோடிக்கணக்கான லைக்குகளை பெறும். இதனிடையே அவருடைய தீவிர ரசிகைகைள் சிலர் அவரைப்போலவே மாறவேண்டும் என தீவிர முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் தென் கொரியாவை சேர்ந்த செர்ரி லீ என்னும் இளம்பெண் கிம் கர்தாஷியன் போலவே மாற லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.அறுவை சிகிச்சைக்கு பிறகு தனது குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கே தன்னை அடையாளம் தெரியவில்லை எனத் தெரிவித்திருக்கிறார் லீ.


28 வயதான லீ தென்கொரியாவில் பிறந்தவர். இவருடைய பெற்றோர் இவர் பிறந்தபோது இவருக்கு ஹான்பியோ எனப் பெயர் சூட்டியுள்ளனர். சிறுவயது முதலே இவருக்கு கிம் என்றால் கொள்ளைப் பிரியமாம். அதனாலேயே அவரைப்போலவே மாற முயற்சித்திருக்கிறார் லீ. இதன் காரணமாக 20 வயதிற்குள்ளாகவே 15 முறை அறுவை சிகிச்சை செய்துகொண்டிருக்கிறார். இதற்காக 48 லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார் இவர்.

இதுபற்றி பேசிய அவர்,”கிம் எப்போதுமே எனக்கு ஒரு உத்வேகமாக இருந்தார். அவர் என் பார்வையில் உலகின் மிக அழகான பெண். உண்மையில் நான் முன்பு இருந்ததை விட முற்றிலும் மாறுபட்ட நபராகத் தெரிகிறேன். நான் மேற்கத்திய தோற்றத்தில் இருக்கிறேன். இதனால் எனது கொரிய குடும்பத்தில் சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை” என்றார்.

மேலும், இதுபற்றி பேசிய அவர்,”சிகிச்சையை எப்போது நிறுத்த வேண்டும் என்று எனக்குத் தெரியும். மேலும் அறுவை சிகிச்சைகள் எதையும் நான் இப்போது திட்டமிடவில்லை. நான் விரும்பிய தோற்றத்தை அடைந்துவிட்டேன். எனது ஒரே வருத்தம் நான் ஏன் இதை முன்பே செய்யவில்லை என்பதுதான்” என்றார்.

முன்னதாக, அமெரிக்க மாடல் ஜெனிபர் பேம்ப் லோன் என்பவர் கிம் கர்தாஷியன் போல மாற கடந்த 12 ஆண்டுகளில் 40 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தார். இதற்காக 4.9 கோடி ரூபாய் செலவும் செய்திருக்கிறார். இருப்பினும் தான் மகிழ்ச்சியாக இல்லை என்று தெரிவித்திருந்த அவர் மீண்டும் தன்னுடைய நிஜ முகத்துக்கே திரும்புவதற்காக சிகிச்சை பெற்று வருவதாக அறிவித்திருந்தது கடந்த வாரம் வைரலாக பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.