நடுக்காட்டில் நின்ற கார்.. கதவை திறந்து பார்த்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

429

ஜெர்மனியில்..

தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. 24 வயதாகிறது. அவரது பெயர் ஷராபன். இவர் ஷேகிர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு ஷராபன் குடும்பத்தில் தகராறு வந்துள்ளது..

இதன் காரணமாக, ஷராபன் சில காலம் தலைமறைவாக இருக்க ஆசைப்பட்டார். அப்படி தலைமறைவாக இருக்கும்போதுதான், ஒரு விபரீதம் எண்ணம் அவருக்கு தோன்றியது.

அதாவது தன்னை போலவே, உருவத்தில் ஒரே மாதிரி இருக்கும் பெண்கள் யாராவது இருக்கிறார்களா என்று சோஷியல் மீடியாவில் தேட ஆரம்பித்தார். தன்னைபோலவே ஜாடை இருக்கும் ஒரு பெண் இருப்பதை கண்டுப்பிடித்துவிட்டார்.


முனிச் பகுதியில் அந்த பெண் வசித்து வருகிறார். அல்ஜீரியாவை சேர்ந்த அவரது பெயர் கதீஜா. 23 வயதாகிறது. கதீஜா தன்னை போலவே தோற்றம் அளிப்பதையும் ஷராபன் பலமுறை உறுதி செய்து கொண்டார்.

அதற்கு பிறகு, இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டு நட்பு வலை வீசியுள்ளார்.. பிறகு மெல்ல பேச்சை ஆரம்பித்துள்ளார். “தன்னிடம் அழகு கிரீம்கள் நிறைய இருக்கின்றன என்றும், நேரில் வந்து தன்னை சந்தித்து, அந்த கிரீம்களை பெற்றுக் கொள்ளுமாறும்” கதீஜாவிடம் சொன்னார்.

க்ரீம்களை பற்றி சொல்லவும், கதீஜாவும், ஷராபனை நேரில் சந்திக்க அந்த குறிப்பிட்ட இடம் நோக்கி சென்றுள்ளார். அப்போது, ஷராபன் தன்னுடைய காதலன் ஷேகிரை அங்கே முன்கூட்டியே வரவழைத்து காத்திருந்தார்.

கதீஜா அங்கு சென்றதுமே, ஷராபனும் ஷேகிரும் சேர்ந்து கதீஜாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். பிறகு, கதீஜாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். அதுவும் 50 முறைக்கு மேல் குத்தி கொன்றுள்ளனர். அதற்கு பிறகு, சடலத்தை ஒரு சாக்கு பையில் கட்டி, காரில் மறைத்து வைத்துவிட்டு,

இருவருமே அங்கிருந்து தப்பினர். இதனிடையே, கதீஜாவை காணோம் என்று அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசாரும் தேடி அலைந்தபோதுதான் அங்குள்ள காட்டு பகுதியில் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்ததை கண்டனர்.

அருகில் சென்று பார்த்தபோதுதான், காருக்குள் பெண்ணின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். இந்த விஷயம் கதீஜாவின் பெற்றோருக்கும் தெரிவிக்கப்பட்டது.

அது தங்கள் மகளின் சடலம் தான் என்று இருவருமே கதறி அழுதனர்.. ஆனாலும், போலீசார் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்து, டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தால்தான் உறுதி செய்ய முடியும் என்றனர்.

அதன்படியே, அந்த டிஎன்ஏ ரிசல்ட்டில், காரில் கிடந்தது கதீஜா என்பது உறுதியானது.  இதற்கு பிறகுதான், ஷராபன் பற்றி போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

குடும்ப பிரச்சினை காரணமாக ஷராபன் தலைமறைவாக இருப்பதும், காதலனுடன் சேர்ந்து தன்னை போலவே இருக்கும் பெண்களை விரட்டி விரட்டி கொல்ல துடிப்பதையும் கேள்விப்பட்டு போலீசார் அதிர்ந்து போனார்கள்..

ஆனால், ஷராபன் தலைமறைவாகிவிடவும் அவரை கண்டுபிடிக்க போலீசார் பெரும் முயற்சி எடுத்தனர். இறுதியில், காதலனுடன் தலைமறைவாக வாழ்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் 2 பேரையுமே போலீசார் கைது செய்துள்ளனர்.

தன்னை போலவே வேறு யாராவது பெண்ணை ஷராபன் கண்டுபிடித்துள்ளாரா? என்பது உட்பட பல விசாரணைகள் ஷராபனிடம் ஆரம்பமாகி உள்ளது. இந்த சம்பவம் ஜெர்மனியில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.