நாக்கை பிளவுப்படுத்தி டாட்டூ போட்ட இளைஞரின் தற்போதைய நிலை!!

5

நாக்கை பிளவு படுத்தியும், கண்களில் டாட்டூ குத்தியும் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர், சிறையில் இருந்து விடுதலையாகி புதிய வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் வசிப்பவர் ஹரிஹரன். நார்மலாக தெரிந்தால் நாலு பேர் நம்மை கவனிக்க மாட்டார்கள் என்பதால், வித்தியாசமாகத் தெரிய வில்லங்கமான வேலைகளில் இறங்கியவர் தான் இந்த ஹரிஹரன்.

இதில் உச்சகட்டமாக பாம்புக்கு இருப்பது போல் நாக்கை பிளந்து இரட்டை நாக்காக ஆபரேஷன் செய்து கொண்டார். அதுமட்டும் போதாது என்று கண்களின் வெள்ளை படலம் மீது நீல நிறத்தில் பச்சை குத்திக் கொண்ட கொடூரத்தையும் அரங்கேற்றி இருக்கிறார்.

இந்த தொழில் நுட்பங்களை மும்பையில் கற்றுக் கொண்டு, திருச்சிக்கு வந்த ஹரிஹரன், ஏலியன் டாட்டூ என்ற பெயரில் கடை விரித்து இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்த நிலையில்,திருச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு ஹரிஹரன் நாக்கு பிளவு அறுவை சிகிச்சை செய்து அந்நிகழ்வை தனது செல்போனில் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அவரிடம் தொடர்ந்து விசாரித்த போது, ஏடாகூடமான சில தகவல்களும் வெளிச்சத்துக்கு வந்தன. சாதாரணமாக டாட்டூ போட மூன்றாயிரம் முதல் பத்தாயிரம் வரை வசூல் செய்துள்ளார் ஹரிஹரன்.


அந்தரங்க பாகங்களில் டாட்டூ போட வேண்டும் என்றால் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்திருக்கிறார். இதுவரை 3 பேருக்கு நாக்கை பிளவு படுத்தும் அறுவை சிகிச்சை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.