நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46 வயது பெண்!!

430

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமணம் மண்டபம் ஒன்று உள்ளது. இதன் அருகில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (61) வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று கிறிஸ்தவ மத பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி என்ற பிரின்சி (46) என்பவர் அறிமுகமாகியுள்ளார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு டேனியலுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீராசாமி, செல்வியிடம், தான் தனியாக தங்கியிருப்பதாகவும், தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் தேவை என்றும் கூறியிருக்கிறார்.

 அதற்கு நானே செய்கிறேன் என கூறிய செல்வி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டேனியல் வீட்டிலேயே தங்கி அவருக்கு சாப்பாடு ஆக்கிப்போட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை 6 மணியளவில் டேனியல் வீட்டின் வாசலில் செல்வி கதறியபடி அழுதுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது மத போதகர் டேனியலை தான் கொலை செய்துவிட்டதாகக் கூறியுள்ளார்.


இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த டேனியல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து செல்வியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் மத போதகர் டேனியல் எனக்கு தினமும் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்தார். அதேபோல நேற்று முன்தினம் இரவும் என்னிடம் அளவுக்கு அதிகமாக செக்ஸ் வைத்துக்கொண்டு, டார்ச்சர் செய்தார். அதனால், எனக்கு அவர் மீது ஆத்திரம் ஏற்பட்டு கொலை செய்துவிட்டதாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக செல்வி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.