பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்ற மகள் : சைக்கோ தாய் செய்த கொ.டூர செயல்!!

350

கர்நாடகா….

அண்டை மாநிலமான கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் தான் இந்த கொடூர செயல் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக தாய் என்பவர் தனது குழந்தையினை உச்சி முகர்ந்து கொஞ்சி பூரிப்படைவதை தான் அன்றாடம் பார்த்துக் கொண்டிருப்போம். ஆனால் இங்கே ஒரு தாயார் தன்னுடைய 9 வயது மகளுக்கு செய்திருக்கும் கொடூரச் செயல் கல்நெஞ்சையும் கரைப்பதாக அமைந்துள்ளது.

பெங்களூருவின் ஹெப்பல் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு கையில் காயமடைந்த தன்னுடைய 9 வயது மகளை அவருடைய தாயார் சிகிச்சைக்காக அழைத்து வந்திருக்கிறார்.

தனது மகள் விளையாடிக்கொண்டிருக்கும் போது கீழே விழுந்ததில் அவருடைய வலது கையில் காயமடைந்திருப்பதாக அவர் மருத்துவரிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறுமியின் கையில் தீயினால் ஏற்பட்ட புண்கள் இருப்பதை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.


உடனடியாக அங்கு வந்த பெண் போலீஸ் ஒருவர் சிறுமிடம் என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார். அச்சிறுமி போலீசிடம் தெரிவித்த தகவல்கள் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

கடந்த ஜூன் மாதம் 3வது வாரத்தில் சிறுமியின் தாயார் வேலைக்காக வெளியே சென்ற போது, அச்சிறுமி பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்றிருக்கிறார். வேலை முடிந்து அவரின் தாயார் வந்த போது பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்திருக்கிறார், இதனால் கடுமையான கோபம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆத்திரத்தில் கட்டையை எடுத்து சிறுமியை அடித்திருக்கிறார். பின்னர் மெழுகுவர்த்தி ஒன்றின் மூலம் சிறுமியின் வலது கையை பொசுக்கியிருக்கிறார். ஜூன் 3வது வாரத்தில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில் கடந்த ஜூலை 5ம் தேதி அவர் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

சிறுமி அளித்த வாக்குமூலத்தை அடுத்து அவருடைய தாய் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். பின்னர் அவரை கைது செய்த நிலையில், பிணையில் விடுவித்து விட்டனர். அவர் சிறுமியின் கையை தான் பொசுக்கவில்லை என கூறியுள்ளார்.

கணவரை பிரிந்த அப்பெண் 9 வயதாகும் இரண்டாவது மகளுடன் ஆர்.டி நகரில் தனியாக வசித்து வருகிறார். கணவரும், மூத்த மகளும் தனியாக வேறு ஒரு பகுதியில் வசித்து வரும் நிலையில், இவர் வாழ்வாதாரத்திற்காக சில வேலைகளை பார்த்து வருவதாக தெரிவித்தார்.

பக்கத்து வீட்டில் எப்போதும் குழந்தையைப் பற்றி மோசமாகப் பேசியதைப் பார்த்து தான் விரக்தியடைந்ததாக அந்தப் பெண் கூறுகிறார் என காவல்துறையினர் தெரிவித்தனர். பெற்ற மகள் என்றும் பாராமல் 9 வயது சிறுமியின் கைகளை அவரின் தாயாரே பொசுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.