பசியால் வாடும் 8 குழந்தைகள்… நண்பருக்கு உதவ சென்ற தந்தைக்கு நேர்ந்த பரிதாபம்!!

630

தென் அமெரிக்கா..

வெனிசுலாவில் நண்பர் ஒருவருக்கு உதவ முயன்று தனது நான்கு கை கால்களையும் இழந்த தந்தை எல்விஸ் சனாப்ரியா, தனது 8 குழந்தைகளும் இப்போது உணவு வழங்க முடியாத இக்கட்டான நிலையில் இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

தென் அமெரிக்காவின் வெனிசுலா நகரில் வசித்து வரும் எல்விஸ் சனாப்ரியா(48) என்ற தந்தை, தனது எட்டுக் குழந்தைகளும் பசியால் வாடுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

எல்விஸ், நாட்டின் உயரமான கட்டிடங்கள் பலவற்றில் கண்ணாடி முகப்புகளை நிறுவும் பணியை எல்விஸ் சனாப்ரியா செய்து வந்துள்ளார்.


ஆனால் சமீபத்தில் வெனிசுலாவின் மிகவும் தண்ணீர் வளம் குறைவான பகுதியில் தண்ணீரை சேமித்து வைப்பதற்காக கிணறு ஒன்றை தோண்ட வேண்டும் என்று நண்பரான பக்கத்து வீட்டுக்காரர் உதவி கேட்ட போது, அதை செய்ய எல்விஸும் ஒப்புக் கொண்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மின் உயர் அழுத்த விபத்தில் எல்விஸ் தனது நான்கு கை கால்களையும் உடலில் இருந்து அகற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார், அத்துடன் அவரது அண்டை வீட்டுக்காரரின் உதவிக்கு வந்த மற்றொரு நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நண்பருக்கு உதவ முன்வந்த போது ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், தனது நான்கு கை கால்களையும் இழந்ததால் என்னால் வேலை செய்ய முடியவில்லை, இதனால் போதிய வருமானம் இல்லாமல் தன்னுடைய 8 குழந்தைகளும் அடிக்கடி பசியுடன் படுக்கைக்கு செல்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

என்னுடைய பாரிய குடும்பத்திற்கு உதவுவதற்காக என் மனைவி மற்ற வீடுகளில் சுத்தம் செய்யவும் கழுவவும் செல்கிறார், இதன் மூலம் கொஞ்சம் பணம் பெறுகிறார் என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 8 குழந்தைகளின் தந்தையான எல்விஸ் சனாப்ரியா, GOFUNDME மூலம் பணம் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார், இதில் கிடைக்கும் உதவி தொகையின் மூலம் செயற்கை கை கால்களை வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதனை கொண்டு தனது குடும்பத்திற்கு வருமானம் ஈட்டி உதவ முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.