பள்ளி திறந்த முதல் நாளே பிரித்தானியாவில் மாணவர் மீது துப்பாக்கிச்சூடு: மருத்துவமனைக்கு விரைந்துள்ள ஏர் ஆம்புலன்ஸ்!!

454

பிரித்தானிய……

பள்ளி திறந்த முதல் நாளான திங்கட்கிழமையே மாணவர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் பிரித்தானிய நகரமொன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானிய நகரமான Kesgraveயிலுள்ள பள்ளி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது மாணவர் ஒருவர் சுடப்பட்டார்.

அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், ஓடுங்கள், யாரோ ஒருவரை சுட்டு விட்டார்கள் என்று அலறியவண்ணம் ஓட்டம் பிடித்தார்கள்.


சுடப்பட்ட அந்த மாணவர், படுகாயமடைந்த நிலையில், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அத்துடன் ஆயுதம் தாங்கிய பொலிசார் Kesgrave பகுதியை சுற்றி வளைத்தனர். சிறிது நேரத்தில், பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்தனர். அவருடைய வயது தெளிவாக தெரியாத நிலையில், அவரை பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

பள்ளி திறந்து மாணவர்கள் பள்ளிக்கு திரும்பிய வாரத்தின் முதல் நாளே இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்களை மட்டுமின்றி பெற்றோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.