பள்ளிக்கு சென்ற சிறுமி கர்ப்பம்… வங்கி ஊழியர் அதிரடி கைது : அதிர்ச்சி சம்பவம்!!

474

தர்மபுரி…

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆன்ஸ்ட்ராஜ். இவர் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் தர்மபுரியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், இவரது உறவினரின் மகளிடம் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் நெருக்கமாகியுள்ளார். மேலும் தனியாக அழைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்த விஷயத்தை சிறுமி தனது வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிறுமியின் வயிறு பெரிதாவதை கண்ட உறவினர்கள், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தனர். இதனால் நடந்தவற்றை சிறுமி தெரிவித்தார்.


இதையடுத்து புகாரின்பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில் சிறுமி பள்ளிக்கு செல்லும்போது ஆனஸ்ட்ராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று, ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி லோக்கூர் வனப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து தனியார் வங்கி ஊழியர் ஆனஸ்ட்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனஸ்ட்ராஜின் மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.