பாகிஸ்தானில் 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் திறப்பு!

341

பாகிஸ்தானின்…

பாகிஸ்தானின் 126 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் புனரமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் 90 லட்சம் இந்து மத மக்கள் வாழ்வதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வமாக 75 லட்சம் மக்கள் அங்கு இருக்கின்றனர். அதில் பெரும்பாலான மக்கள் சிந்து மாகாணத்தில் வாழ்கின்றனர்.

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் ஹைதராபாத் நகரத்தில் ‘கோஸ்வாமி பர்சுத்தம் கர் நிகால் கர்’ என்ற 126 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் உள்ளது. இது சில ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.


இந்நிலையில், இந்த சிவன் கோயில் புனரமைக்கப்பட்டு மக்கள் வழிபாட்டுக்காக வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கோவிலைச் சுற்றி உள்ள ஆ.க்.கி.ர.மி.ப்பு நிலங்களும் மீ.ட்.க.ப்பட்டு, கோவிலுடன் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கோயில் நிர்வாகம் ஒரு உள்ளூர் இந்து அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சிறும்பான்மையினர் வழிபாட்டுத்தலங்களை கவனிக்கும் அறக்கட்டளை செய்தி தொடர்பாளர் அமீர் ஹம்ஸி தெரிவித்துள்ளார்.

இதுபோன்று, சியால்கோட் நகரத்தில் உள்ள 1000 ஆண்டுகள் பழமையான ஷவாலா தேஜா கோயில் உட்பட பாகிஸ்தானில் பல கோயில்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.