பிரபல பாடகிக்கு ஷாக் கொடுத்த தகவல்: மின்கட்டணம் மட்டும் இத்தனை லட்சமா?

855

தன்னுடைய வீட்டுக்கு ரூ.2 லட்சம் மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளாராம் பிரபல பாடகியான ஆஷா போஸ்லே.

பிரபல இந்தி திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே. இவரது வீடு மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள மலைவாசஸ்தலமான லோனேவாலாவில் அமைந்துள்ளது.

இவரது வீட்டிற்கான ஜூன் மாதத்திற்கான மின் கட்டணம் ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக பில் கட்டணத்தை மகாராஷ்டிரா மாநில மின்சார விநியோக நிறுவனம் (மகாடிஸ்காம்) அனுப்பி உள்ளது.

இதை பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்த பாடகி, என் வீட்டிற்கான ஏப்ரல் மாத மின்கட்டணம் ரூ.8,996.98 மற்றும் மே மாத மின் கட்டணம் ரூ.8,855.44 என வந்து கொண்டிருக்கும் போது ஜூன் மாதத்திற்கான கட்டணம் மட்டும் எவ்வாறு ரூ.2 லட்சத்து 8 ஆயிரத்து 870 ஆக அதிகரிக்கும் என கேட்டுள்ளார்.


இதற்கு பதில் அளித்துள்ள மகாடிஸ்காம் -ன் செய்தி தொடர்பாளர் ஆஷாவின் புகாரை அடுத்து புனே வட்டத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் ஆஷாவின் வீட்டிற்கு சென்று மின்மீட்டரை சரி பார்த்துள்ளார்.

அப்போது மின் கணக்கை பதிவு செய்த நபர் சரியாகத்தான் பதிவு செய்துள்ளதாக அந்த மூத்த அதிகாரி தெரிவித்து உள்ளதாக கூறினார்.