பிரபு தேவாவுடன்அப்படிதான் இருந்தார்; நயன்தாராவை வம்பு இழுத்த வனிதா.. கொந்தளித்த ரசிகர்கள்!

1011

பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் செய்த விஷயம் தான் தற்போது ஊடகங்கள் மட்டுமின்றி இணையத்தளங்களிலும் பெரிய விவாதமாக மாறி இருக்கிறது.

அதில், வனிதா முக்கியமாக பீட்டர் பால் ஏற்கனவே திருமணமாகி விவாகாரத்து பெறாமல், வனிதாவை திருமணம் செய்ததால், எதிர்ப்புகள் அதிகம் எழுந்தன.

இதனால் வனிதாவின் தனிப்பட்ட குடும்ப விஷயத்தில் தலையிட்டதாக, லஷ்மி ராமகிருஷ்ணன் மற்றும் கஸ்தூரி, சூர்யா தேவி என பலரையும் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருவது வெளியாகி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், வனிதா தற்போது ட்விட்டர் பக்கத்தில் முன்னணி நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.


அதில், நடிகை நயன்தாராவை, சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபு தேவாவுடன் உறவு கொண்டிருந்தபோது நயன்தாராவுக்கு எதிராக ஏன் ஒருபோதும் குரல் எழுப்பவில்லை என்று வனிதா கஸ்தூரி மற்றும் பிறரிடம் கேட்டார், அவரும் (பிரபு தேவா) ஒரு திருமணமான மனிதர் என்ற உண்மையை கருத்தில் கொண்டு, ட்விட் செய்துள்ளார்.

லஷ்மி ராமாகிருஷ்ணனையும், கஸ்தூரியையும் அதில் குறிப்பிட்டு, பிரபு தேவாவின் மனைவி ராமலதாவுக்கு மூன்று குழந்தைகள் இருந்தது அப்போது நீங்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை அவருக்காக? என ட்வீட் செய்துள்ளார்.

சில மணிநேரங்களில் அந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் வைரலானதை அடுத்து வனிதா உடனே ட்விட்டரை நீக்கியுள்ளார்.

ஆனாலும், ரசிகர் ஒருவர் அந்த ட்வீட்டை ஸ்கிரின் ஷாட் எடுத்து, வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்த பிரச்சினையில் ஏன் நயன்தாராவை இழுக்கிறீர்கள் என்றும் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.