பிரான்சில் 70 ஆண்டுகள் பழமையான மெற்றோ பயணசிட்டை கண்டுபிடிப்பு!!

362

பிரான்சில்………

பிரான்சில் RATP அதிகாரி ஒருவர் 70 ஆண்டுகளுக்கு முந்தைய மெற்றோ பயணச்சிட்டைகள் சிலவற்றை கண்டெடுத்துள்ள புகைப்படம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

பிரான்சில் வசித்து வரும் RATP அதிகாரி ஒருவர் மெற்றோ சேவைகளின் வரலாறுகளில் ஆர்வம் கொண்டவர். இவர் கடந்த 1950-ஆம் ஆண்டைச் சேர்ந்த மெற்றோ சிட்டைகளை புகைப்படம் எடுத்து தனது சமூக வகைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த பயணச்சிட்டைகளின் அட்டைகளில் அவை, அச்சடிக்கப்பட்டுள்ளன. அவ்வகை சிட்டைகள் 1991-ஆம் ஆண்டிலேயே இல்லா தொழிக்கப்பட்டவையாகும்.


இதுபோன்ற பொக்கிஷங்களை நான் மிகவும் கவனமாக கூர்மையான கண்களால் தேடுகின்றேன். கால்களுக்கடியில் புதைந்துள்ள இந்த பொக்கிஷங்களை நான் மீட்டுள்ளேன் என்ற மகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.