பிரான்சில் தாயையும், மகளையும் இரயில் தண்டவாளம் நோக்கி தள்ளவிட்ட இளம் பெண்! அதன் பின் நடந்த சம்பவம்!!

827

பிரான்சில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய தாய் மற்றும் மகளை இரயில்வே தண்டவாளம் நோக்கி தள்ளிவிட்ட சம்பவத்தில் சக பயணிகளால் காப்பாற்றப்பட்டார்.

பிரான்சின் Cachan (Val-de-Marne) நகரில் இருக்கும் Bagneux RER இரயில் நிலையத்திற்கு கடந்த வெள்ளிக் கிழமை 20 வயது மதிக்கத்தக்க பெண் தன்னுடைய 40 வயது மதிக்கத்தக்க தாய் மற்றும் 2 வயது மதிக்கத்தக்க மகளுடன் சென்றுள்ளார்.

அப்போது இரயில் வருவதற்காக காத்திருந்த போது, திடீரென்று தண்டவாளம் நோக்கி, குறித்த இளம் பெண் தாய் மற்றும் மகளை தள்ளிவிட்டுள்ளார்.


ஆனால், இதை அறிந்த சக பயணிகள் உடனடியாக அவர்களை காப்பாற்றியுள்ளனர். இதற்கிடையில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால்,

விரைந்து வந்த பொலிசார், அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர் விசாரணைக்கு பின்னரே அந்த பெண் ஏன் இப்படி செயலில் ஈடுபட்டார் என்பது தெரியவரும்.