பிரான்சில் உயிருடன் குதிரைகளை சிதைத்து, அவைகளின் உடல் பாகங்களை எடுத்துக் கொண்ட மர்ம கும்பலை பிரெஞ்சு பொலிசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாட்டில் குதிரைகள் மற்றும் கழுதைகள் மீது குறைந்தது 15 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன, மிக சமீபத்தில் லியோனுக்கு அருகிலுள்ள கிராமப்புறங்களில் மர்ம கும்பலின் தாக்குதல் நடந்தேறியுள்ளது.
திடீரென்று முன்னெடுக்கப்பட்டுவரும் இந்த தாக்குதல் தொடர்பில் அதிகாரிகள் எந்த சந்தேக நபர்களையும் அல்லது நோக்கத்தையும் அறிவிக்கவில்லை. ஆனால் இந்த தாக்குதல்கள் விவகாரமான சடங்கு அல்லது ஒன்லைன் சவாலின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று ஊகிக்கின்றனர்.
திங்களன்று ஜூரா பகுதியில் இயற்கை காரணங்களால் இறந்த ஒரு பெண் குதிரையின் மூக்கு, காது மற்றும் ஒரு கண் அகற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதே பகுதியில் இதற்கு முன்னர் ஒரு குதிரையின் கண்கள் இரண்டும் பிழுதெடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. குறித்த குதிரை பின்னர் இறந்தது. இந்த சம்பவங்கள் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.