பிரித்தானியாவில் பட்டப்பகலில் 12 மணிக்கு அடையாளம் தெரியாத நபரால் நடந்த சம்பவம்! பதறி போன மக்கள்!!

477

பிரித்தானியாவில் பட்டப்பகலில் டைன் பாலத்தில் இருந்து நபர் ஒருவர் விழுந்த சம்பவத்தில், அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் Newcastle-ல் இருக்கும் Tyne பாலத்தில், இன்று பிற்பகல் அடையாளம் தெரியாத நபர் திடீரென்று கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தர்.

இதை உறுதிபடுத்தியுள்ள பொலிசார் Newcastle மற்றும் Gateshead-ஐ இணைக்கும் Tyne பாலத்தில் பிற்பகல் 12 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசாரின் செய்தி தொடர்பாள கூறுகையில், இந்த மரணம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான எந்த ஒரு சூழ்நிலையும் இல்லை.

இது தற்போது விசாரணையில் உள்ளது. உயிரிழந்த நபரின் விபரங்கள் வெளியிடப்படாது. அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்ட பின்னரே அந்த நபர் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த சம்பவம் காரணமாக அங்கிருந்த மக்கள் அந்த நபர் கீழே விழுவதை பார்த்ததாகவும், அவர்கள் அதை பார்த்து பதறிவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இது குறித்து இணையவாசி ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று மதியம் 12 மணியளவில், Newcastle-ன் Tyne பாலத்தில் இருந்து ஒருவர் விழுந்ததாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து உடனடியாக பொலிசார் அப்பகுதிக்கு விரைந்தனர். ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துவிட்டார்.

அந்த நபரை முறையாக அடையாளம் காணவும், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ளவும் விசாரணைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.