தமிழகத்தில் அரசு பள்ளி ஒன்றில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன், தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு பகுதியை சேர்ந்த தம்பதி பாலாஜி-சுமதி. இவர்களுக்கு அசோக் குமார் என்ற 18 வயதில் மகன் உள்ளார்.
அசோக்குமார், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இதையடுத்து நேற்று தமிழகம் முழுவதும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் திடீரென்று அறிவிக்கப்பட்டது. இதில் வழக்கம் போல் பசங்களை விட, பெண்களே அதிக தேர்ச்சி சதவீதம் பெற்றனர்.
இருப்பினும், அசோக்குமார் பள்ளியில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார். அரசு பள்ளியில் இவர்தான் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். இருப்பினும், தான் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத காரணத்தினால், மிகுந்த வேதனையில் அசோக் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தால், இதை தாங்கி கொள்ள முடியாத அவர், வீட்டுக்கு பக்கத்தில் இருருக்கும் மாந்தோப்பிற்கு சென்று, தாயின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகன் முதல் மதிப்பெண் எடுத்துவிட்டான் என்று பெற்றோர் மகிழ்ச்சியாக இருந்த நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதைக் கண்ட அவரின் பெற்றோர் மாணவனின் பெற்றோர் அவரின் சடலத்தை கட்டிப்பிடித்து கதறி அழுதது அங்கிருந்தவர்களை கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அசோக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.