புறப்பட தயாரான விமானத்தில் நடந்த துயர சம்பவம்… சக பயணிகள் கண்முன்னே பெண் எடுத்த விபரீத முடிவு!!

322

துருக்கி..

துருக்கியின் Adnan Menderes விமான நிலையத்திலேயே திங்களன்று குறித்த துயர சம்பவம் நடந்துள்ளது. 32 வயதான Beyza Taskiran என்பவர் சக பயணிகளின் முன்னிலையில், 50 அடி படிக்கட்டில் இருந்து குதித்துள்ளார்.

மென்பொருள் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்துள்ள Beyza Taskiran, விமானப் படிக்கட்டில் இருந்து குதித்து தரையில் மோதி சம்பவயிடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அந்த சம்பவத்திற்கு முன்னர் அவர் தமது அலைபேசியில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.


தற்போது அவரது அலைபேசியை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர் யாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பதை அறிந்துகொள்ள விசாரணை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் துருக்கி அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்துள்ளதுடன், உடற்கூராய்வுக்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.