பெற்றோரின் சொன்ன ஒரு வார்த்தைக்காக 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய நபர்!!

3034

உகாண்டாவில்..

உகாண்டாவிலுள்ள ஆணொருவர் சுமார் 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தற்போது இருக்கும் காலக்கட்டங்களில் ஒரு திருமணம் செய்துக் கொள்ளவே கஷ்டப்படுகிறார்கள். இதன் மூலம் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு, படிப்பு என பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையே முடிந்து விடுகிறது.

இந்த நிலையில் உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா எனும் 68 வயதான நபர், சுமார் 12 ஊர் பெண்களை திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.


இவர்களின் மூலம் அவருக்கு 102 பிள்ளைகள் மற்றும் 578 பேரப்பிள்ளைகளும் கிடைத்து புதிய கிராமமே உருவாகி உள்ளது. இதனை தொடர்ந்து மனைவிமார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் உணவு, கல்வி, உடுத்த உடை போன்ற,

அடிப்படை தேவைகள் பற்றாக்குறையால் இரண்டு மனைவிகள் இவரை தனியாக விட்டு சென்றாகவும், இன்னும் மூன்று மனைவிகள் பக்கத்து ஊரில் வசித்து வருகிறதாகவும் அங்கிருக்கும் மனைவிகள் தெரிவித்துள்ளார்கள்.

மூசா சிறு வயதில் இருக்கும் போது அவரின் பெற்றோர்கள் இவரை தன்னுடைய இனத்தை பெருக்குமாறும், இதற்கு நீ நிறைய திருமணம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்கள்.

இதனால் தான் இவர் அடுத்தடுத்து பல திருமணங்களை செய்துள்ளார். மனைவிகள் மூலம் போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மேலும் இவர்களை கவனிக்க மூசாவேிற்கு முடியாத காரணத்தினால் தற்போது குழந்தைகள் பெற்றுக் கொள்வதில்லையாம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்தத பலர் “ ஒரு குடும்பத்தை பார்க்கவே காசு இல்லாத, நிலையில் இவ்வளவு மனைவிமார்களா? என அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.