பேயை திருமணம் செய்த பிரித்தானிய பெண்.. விவாகரத்து கோரும் வினோதம்!!

412

பிரித்தானியாவில்..

ராக்கர் ப்ரோகார்ட் (Rocker Brocarde) எனும் பிரித்தானிய பெண், 2022 ஹாலோவீன் அன்று, கைவிடப்பட்ட தேவாலயத்தில் எட்வர்டோ (Edwardo) என்ற பேயை மணந்தார். பாடகியான ராக்கர் ப்ரோகார்ட், அந்த பேயுடன் ஐந்து மாதங்களுக்கு டேட்டிங் செய்த பிறகு திருமணம் செய்துகொண்டார் என கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, அவரது திருமண வாழக்கை நன்றாக அமையவில்லை. சரி பேய் தானே என அதனை அப்படியே கடந்து செல்ல முயற்சித்தபோது, அந்த பேய் தன்னைப் பின்தொடர்ந்து தன் வாழ்க்கையை ஒரு துயரமாக மாற்றியுள்ளதாக கூறுகிறார் ராக்கர் ப்ரோகார்ட்.

அந்த பேய் அவரைப் பின்தொடர்வதாக குற்றம்சாட்டிய ராக்கர் ப்ரோகார்ட், இப்போது எட்வர்டோவை தனது வாழ்க்கையிலிருந்து வெளியேற்றுவது பற்றி யோசிப்பதாகவும் அவர் கூறினார்.


‘நான் என் பந்தத்தின் முடிவில் இருக்கிறேன். நான் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பவில்லை, ஆனால் ஒரு பேயை திருமணம் செய்துகொள்வது வேலை செய்யாது என்று உணர்கிறேன்” என்று அந்த பெண் கூறினார்.

மேலும், மறைந்த நடிகை மர்லின் மன்றோவைப் பற்றி எட்வர்டோ கூறிய கருத்து, அவரது திருமண நாளில் தன்னை கோபப்படுத்தியதாக கூறினார். ப்ரோகார்ட் அவர்கள் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன், தங்கள் திருமண வாழ்க்கையை தீவிரமாக நடத்துமாறு எட்வர்டோவிடம் கெஞ்சியதாகவும்,

ஆனால் அவருடைய கோரிக்கை வீணானது என்று கூறுகிறார். இந்நிலையில், எப்படியாவது பேயோட்டும் சடங்கு செய்து தனது பேய் கணவனை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறார்.