மகனை காப்பாற்ற சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்.. நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!

548

அமெரிக்காவில்..

அமெரிக்காவில் கடற்கரையில் குளிப்பதற்காக சென்ற மகன் நீரில் மூழ்கியதையடுத்து, இந்தியா வம்சாவளியினரான ஆந்திராவைச் சேர்ந்த பொட்டி வெங்கட ராஜேஷ் குமார் (44) காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு உயிரிழந்தார்.

ராஜேஷ் குமார் கடந்த வருடம் ஜனவரியில் தான் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திற்கு சென்றுள்ளார். அதன் பின்னர், கடந்த மே மாதத்தில் தான் தன்னுடைய மனைவி, குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துள்ளார். அமெரிக்காவின் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றில் ராஜேஷ் வேலை செய்து வந்து உள்ளார்.

அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற ராஜேஷ்குமார், தனது குடும்பத்தினருடன் ஜாக்சன்வில்லே கடற்கரைக்கு சென்றுள்ளார். அப்போது, அவரது மகன் கடலின் உள்ளே சென்று விளையாடிய நிலையில், கடலின் நீரோட்டத்தில் சிக்கி கொண்டார்.


இதனை கவனித்த ராஜேஷ் மகனை காப்பாற்ற சென்றுள்ளார். எனினும், இரண்டு பேரும் நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டனர். அருகே இருந்தவர்கள் உடனடியாக அவர்களை காப்பாற்ற ஓடி சென்றனர். ஆனால், சுயநினைவற்ற நிலையில் ராஜேஷ் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ராஜேஷின் 12 வயது மகன் மீட்கப்பட்டு ஐ.சி.யூ.வில் சேர்க்கப்பட்ட நிலையில், நிலைமை சீரடைந்துள்ளது.