மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!

158

சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார்.

குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த குழந்தைகள், போதை ஆசிரியருக்கு தகுந்த போதனை செய்ய முடிவு செய்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் போதை ஆசிரியர் வழக்கம்போல் குழந்தைகளை தகாத வார்த்தைகளால் பேசியதால் ஆத்திரமடைந்த குழந்தைகள் தங்கள் செருப்புகளை எடுத்து போதை ஆசிரியர் மீது வீசத் தொடங்கினர்.

அடுத்தடுத்து செருப்புகள் பறந்து வந்ததால், அந்த ஆசிரியர் தனது பைக்கை எடுத்துக் கொண்டு தப்பி ஓடத்தொடங்கினார். குழந்தைகளும் அவரைப் பின்தொடர்ந்து செருப்புகளை வீசி விரட்டியடித்தனர்.


இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. குடிபோதை ஆசிரியரை குழந்தைகளே செருப்பால் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் அடிதாங்க முடியாது தெறித்து ஓடிய ஆசிரியரை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.