மன உளைச்சலில் இருந்த மருத்துவர்.. குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!

242

உத்தரபிரதேசத்தில்..

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, குடும்பம் வசித்து வந்த அரசு குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்து வரும் நிலையில், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, மருத்துவர் லால்கஞ்சில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் DMO ஆக பணிபுரிந்தார்.

அவரது மனைவி, மகன் மற்றும் மகள் ஆகியோரின் சடலங்கள் படுக்கையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்த மருத்துவர் டாக்டர் அருண் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் தனது மனைவி அர்ச்சனா, மகள் அதிவா மற்றும் மகன் ஆரவ் ஆகியோருடன் தொழிற்சாலையின் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார்.


மயங்கி விழுந்த மனைவி, மகன் மற்றும் மகளுக்கு மருத்துவர் முதலில் ஊசி போட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அலோக் பிரியதர்ஷி தெரிவித்தார்.

பின்னர், சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்தார். பின்னர், அவரும் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசாருக்கு தெரியவில்லை. மேலும், “இறந்த உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன” என்றும் அவர் கூறினார். டாக்டர் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டார்,

அதன்பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் வளாகத்தில் வசிக்கும் எவரும் பார்க்கவில்லை.புதன்கிழமை, அவரது சகாக்கள் அவரைத் தேடி அவரது வீட்டிற்குச் சென்று வீடு பூட்டியிருப்பதைக் கண்டனர். அவர்கள் வீட்டிற்குள் எட்டிப்பார்த்தபோது, ​​உடல்களை பார்த்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உடலை கைப்பற்றினர். ரேபரேலி மாவட்டத்தின் லால்கஞ்ச் என்ற இடத்தில் உள்ள நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையில் ரயில்களுக்கான நவீன பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.