மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கவனிக்க முடியாததால் தந்தை எடுத்த விபரீத முடிவு!!

165

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மணிசரக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். வயநாடு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்துள்ளார்.

இவருக்கு விஜய் மற்றும் ஜிஜேஸ் என்ற இரு மகன்கள் உள்ளனர். ஜிஜேஸ் மனநலம் பாதிக்கப்பட்டவர். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விஜயனின் மனைவி இறந்துவிட்டதால் மனநலம் பாதிக்கப்பட்ட மகனை கவனித்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயன் மற்றும் அவரது மகன் ஜிஜேஸ் ஆகியோர் வீட்டில் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், இருவரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவரது மகன் ஜிஜேஸ் பல வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தார். இதனால், போலீஸ் விசாரணையில், விஜயன் மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு, விஷம் குடித்தது தெரியவந்தது.


ஆனால் விஜயன் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது உறுதியாகத் தெரியவில்லை. மனவளர்ச்சி குன்றிய மகனை மிகுந்த சிரமத்துடன் கவனித்து வந்துள்ளார் விஜயன்.

மேலும் நிதி பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். நிதி நெருக்கடி காரணமாக விஜயன் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கருதப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.