மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!!

10

மதுரை மாவட்டத்தில் குடும்ப பிரச்னையில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கணவன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர்கள் பாண்டிச்செல்வி – கருப்பசாமி தம்பதியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கருப்பசாமி, மதுரை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், போதை பழக்கத்துக்கு அடிமையாகி அடிக்கடி மது அருந்தி வருவதால் கணவன் மனைவி இடையே நீண்ட நாளாக குடும்பத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் குடும்ப பிரச்னை ஏற்பட்டதாகக் தெரிகிறது. இன்று அதிகாலை திடீரென கத்தியால் மனைவியை குத்திக் கொலை செய்த கருப்பசாமி, அங்கிருந்த தப்பியோடிவிட்டார்.

செல்வியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பாண்டிச் செல்வியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இதைத் தொடர்ந்து தப்பியோடிய கணவர் கருப்பசாமியை தேடி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.