மெக்சிகோ சிட்டி..
மெக்சிகோ நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையைச் சாப்பிட்ட பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உலகில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான இறை நம்பிக்கை இருக்கும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அதேநேரம் சில நாடுகளில் டெவில் எனப்படும் சாத்தானை வழிபடுவதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர்.
அவர்களில் சிலர் சாத்தான் அளித்த உத்தரவு என்று கூறி செய்யும் சில சம்பவங்கள் நமக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தும். அப்படியொரு பகீர் சம்பவம் தான் இப்போது மெக்சிகோ நாட்டில் அரங்கேறியுள்ளது.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த 32 வயதான நபர் டெவில் வழிபாடு எனப்படும் சாத்தான் வழிபாட்டைச் செய்து வந்துள்ளார். அவர் தனது மனைவியை கொன்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு குறித்து வெளியான பல தகவல்கள் பகீர் கிளப்பும் வகையிலேயே அமைந்துள்ளது.
கடந்த ஜூன் 29ஆம் தேதி இந்த இளைஞன் போதை மருந்து எடுத்துள்ளார். போதை தலைக்கேற அவர் தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அத்துடன் நிற்காமல் தனது மனைவியின் மூளையை வெளியே எடுத்து, அதை டகோ என்ற உணவில் வைத்துச் சாப்பிட்டுள்ளார். மேலும், அவரது மண்டை ஓட்டை சிகரெட் தூசிகளைப் போடும் ஆஷ் ட்ரேவாக பயன்படுத்தியுள்ளார்.
இந்த கொடூர சம்பவத்தைச் செய்த அந்த நபர் அல்வாரோ என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அல்வாரோ தனது மனைவி மரியா மான்செராட் என்பவரைத் தான் இப்படி கொடூரமாகக் கொலை செய்துள்ளார். கடந்தாண்டு தான் இருவரும் திருணம் செய்து கொண்டுள்ளனர்.
மரியா மான்செராட் இதற்கு முன்பு வேறு ஒருவரைத் திருமணம் செய்து குடும்பம் நடந்து வந்துள்ளார். அந்த திருமணத்தில் அவருக்கு 5 குழந்தைகள் இருந்துள்ளது. அப்போது தான் அவருக்கும் அல்வாரோவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் காதலாக மாற இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துள்ளனர். இருப்பினும், திருணமான ஒரே ஆண்டில் இந்த கொடூர கொலை நடந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை அல்வாரோவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சொன்ன தகவல்கள் மேலும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்துள்ளது. தான் வழிபடும் டெவில் தான் இந்த கொலையைச் செய்ய தனக்கு ஆர்டர் போட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மனைவியைக் கொன்று துண்டு துண்டாக வெட்டிய இந்த சைக்கோ, சில பாகங்களை பிளாஸ்டிக் பைகளில் போட்டுள்ளார். சில பாகங்களை மலையில் வீசிய அவர், வேறு சில பாகங்களை வீட்டிலேயே வைத்துள்ளார்.
அல்வாரோ போதையில் இதைச் செய்துள்ளார். போதை தெளிந்ததும் தான் எவ்வளவு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளோம் என்பதை உணர்ந்த அவர், இரு நாட்கள் கழித்து தனது வளர்ப்பு மகளை அழைத்து தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
அல்வாரோ தனது வளர்ப்பு மகளிடம் போன் செய்து. “உங்கள் அம்மாவை வந்து வாங்கிக் கொள். ஏனென்றால் நான் அவரை ஏற்கனவே கொலை செய்து பிளாஸ்டிக் பையில் போட்டுள்ளேன். வந்து வாங்கிக் கொள்” எனக் கூறியுள்ளான். இந்த கொடூர கொலை குறித்த தகவல்கள் நெட்டிசன்களை அதிர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.