மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும்.. மீண்டு வந்த பெண் ஒருவர் கூறிய திகைக்க வைக்கும் தகவல்!!

743

மரணத்திற்கு பிறகு..

மரணத்தில் இருந்து மீண்டு வந்த பெண் ஒருவர், என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக கூறியது தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை என்ன என்பதை தாம் உணர்ந்ததாக கூறியுள்ள 32 வயது தாயார் ஒருவர், இறந்த பிறகு பயப்பட ஒன்றுமில்லை என தெரிவித்துள்ளார்.

கோர்ட்னி சாண்டியாகோ என்பவர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நிலையில், அதன் தாக்கம் காரணமாக சுமார் 40 நொடிகள் மரணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவரது குடும்பத்தில் பலபேர்களுக்கு மார்பக புற்றுநோய் காணப்படுவதாக கூறியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் எம்ஆர்ஐ மார்பக ஸ்கேன் எடுத்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.


இந்த நிலையில் மருத்துவர்கள் IV ஐச் செருகியதும் அவரது உடல் அதிர்வடையத் தொடங்கியுள்ளது. மட்டுமின்றி இதனால் அவரது இரத்த அழுத்தம் குறைவதற்கும் இதயத் துடிப்பு வெகுவாகக் குறைவதற்கும் காரணமாகியுள்ளது. இந்த தருணத்தில் கோர்ட்னி சாண்டியாகோ சுய நினைவை இழந்துள்ளார். அந்த அனுபவம் குறித்து அவர் தெரிவிக்கையில்,

அந்த நொடியில் தாம் முழுமையான அமைதியினை உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். மேலும், எனது உடல், எனது உயிர், எனது மகன் அல்லது எனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை விட்டுச் செல்வதைப் பற்றி அப்போது தாம் கவலைப்படவில்லை.

இவை எதுவும் அப்போது முக்கியமானதாக உணரவில்லை என தெரிவித்துள்ளார். ஒரு கனவுலகில் நுழைந்தது போன்ற உணர்வு, தாம் ஒரு கடற்கரையில் நின்றிருந்ததாகவும், வாழ்க்கையில் ஒருமுறை கூட சந்தித்திராத ஆனால் நன்கு அறிமுகமான ஒருவரை அங்கே சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாம் சரியாகிவிடும், ஆனால் இது உரிய தருணம் அல்ல எனவும் அந்த நபர் இவரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டதும் தமது சுற்றும் திடீரென்று மாறத் தொடங்கியது எனவும், பின்னர் ஒரு மலையில் தாம் காணப்பட்டதாகவும்,

தமது சிறுவயது வீடு, அங்குள்ள தோட்டம் உள்ளிட்ட தமக்கு நெருக்கமான பல பகுதிகளை தாம் நேரில் கண்டு உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த விசித்திர சம்பவத்திற்கு பின்னர் கண் விழித்த பிறகு, தம்மால் ஒரு வார்த்தை கூட பேச முடியவில்லை எனவும்,

உடல் உறைந்து போனது போன்ற உணர்வு ஏற்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்கள் அவரது அந்த மரணத்தை சந்தித்ததாக கூறப்படும் நிலைக்கு மருத்துவ ரீதியான காரணங்களை கூறியுள்ளனர்.