மாத்தறை………..
உயன்வத்தை – தர்மரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 31 ஆம் திகதி முதல் குறித்த பெண்ணின் நடமாட்டம் இல்லாத நிலையில் அயலவர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய அவரின் வீட்டை சோதனைக்குட்படுத்திய போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.