மாசம் ஒரு கோடி ரூபா வருமானம் தேடும் 16 வயது யுவதி : சுவாரஸ்ய தகவல்!!

997

அமெரிக்கா..

இசபெல்லா பாரட் (Isabella Barrett) என்ற பிரபல அமெரிக்க மாடல் அழகி மாதம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபா பணம் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார். மிக இள வயதிலேயே இசபெல்லா மாபெரும் வெற்றியை அடைந்துள்ளார்.

தனது ஆறு வயதிலேயே மில்லியன்களுக்கு அதிபதியான இசபெல்லா தற்பொழுது மாதாந்தம் ஒரு கோடி ரூபா வருமானத்தை ஈட்டி வருகின்றார். மாடல் அழகியாகவும், சில பிரபல பண்டக்குறிகளின் தூதுவராகவும் இசபெல்லா கடமை ஆற்றி வருகின்றார்.

நியூ ஃபேஷன் வீக் போன்ற மாடலிங் நிகழ்வுகளில் இசபெல்லா பங்கேற்று வருகின்றார். இசபெல்லா தனது ஒரு பண்டக் குறியான ஹவுஸ் ஆப் பார்ட்டி (‘House of Barretti’)என்ற பண்டக்குறியையும் அறிமுகம் செய்துள்ளார்.


சிறுவர்களுக்கான நிகழ்ச்சி ஒன்றில் தோன்றி இவ்வாறு தாம் வருமானம் ஈட்டியதாக தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் வர்த்தக ரீதியாக பாரிய வெற்றியை கண்டுள்ள இசபெல்லா ஒரு ஆசிரியராக வரவேண்டும் என கனவு காண்கின்றார்.

இசபெல்லா 55 தடவைகள் அழகு ராணி பட்டம், வென்றுள்ளதுடன் 85 தடவைகள் அழகு ராணி போட்டிகளில் வெற்றியாளராக தெரிவாகியுள்ளார்.

பல்வேறு மிக முக்கியமான பிராண்ட் வகைகளுக்கு இசபெல்லா மாடல் அழகியாக திகழ்கின்றார். இசபெல்லா மிகச் சிறந்த ஓர் முயற்சியான்மையாளராக கருதப்படுகின்றார்.

சமூக ஊடகங்களில் இசபெல்லாவை ஒன்று தசம் ஆறு மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர்.

ஆடை ஆபரணங்கள் தனக்கு மனதுக்கு பிடித்திருந்தால் அது எவ்வளவு விலை அதிகம் என்றாலும் அவற்றை கொள்வனவு செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளதாக இசபெல்லா கூறுகின்றார்.