மாமியார் கொடுத்த ஜூஸ்.. கணவன் செய்த விபரீத செயல்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்!

1032

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்நிலையில், முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளதால், மார்த்தாண்டம் அருகேயுள்ள மெர்லின் ஜெபராஜ்(40) என்பவருக்கும், ஷைனிக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது.

இதையடுத்து, தனது முதல் கணவனுக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டுள்ளார் ஷைனி. இதற்கு இரண்டாவது கணவரும், அவரது குடும்பத்தாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இருவருக்கும் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆன நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. ஷைனியின் கணவர் மற்றும் மாமியார் இருவரும் ஷைனி மற்றும் அவரது முதல் குழந்தையை அடித்து கொடுமை படுத்திவந்ததாக கூறப்படுகிறது.


இந்நிலையில் ஷைனியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த அவர்கள், இரவு நேரம் பார்த்து ஷைனியின் மாமியார் அவருக்கு ஜூஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். அதனை குடித்த ஷைனி மயங்கிவிழ, அவரது கணவர் மருந்து இல்லாத, காற்று நிரப்பட்ட ஊசியை ஷைனியின் இடுப்பில் இரண்டுமுறை குத்தியுள்ளார்.

மறுநாள் காலை ஷைனி வழக்கம் போல் எழுந்து வேலைகளை பார்க்க தொடங்கியுள்ளார். இருந்தும் அவரது இடுப்பில் கடுமையான வலி ஏற்பட்ட நிலையில் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவரின் உடல்நிலை மேலும் மோசமானதை அடுத்து அவரது தந்தை அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார். ஷைனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு காற்றுபுகுத்தப்பட்ட ஊசி செலுத்தப்பட்டிருப்பதை கண்டறிந்தனர்.

மருந்து இல்லாத காற்று புகுத்தப்பட்ட ஊசியை செலுத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்போகும் என்ற நோக்கில் ஷைனியின் கணவர் அவருக்கு ஊசி செலுத்தியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஷைனி கொடுத்த புகாரை அடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷைனியின் கணவர் மெர்லின் ஜெபராஜ், மாமனார் சவுந்தர்ராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.