மின் கம்பத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு!!

1018

அம்பலந்தொட்ட, மிரிஜ்ஜவில -நவகம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வாகன திருத்தும் இடம் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பிறந்து இரண்டு நாட்களான பெண் குழந்தை காட்டில் கிடப்பது குறித்து பிரதேசவாசிகள் அம்பலந்தொட்ட பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து அவர்கள் அங்கு சென்று குழந்தையை மீட்டு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த குழந்தையை எவரோ ஒருவர் வெள்ளை துணியில் சுற்றி நேற்றிரவு நவகம்கொட பிரதேசத்தில் உள்ள குறித்த காட்டுப் பகுதியில் இருக்கும் மின் கம்பத்திற்கு அருகில் வைத்து விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸாருக்கு நேற்றிரவே தகவல் கிடைத்துள்ளது.


பொலிஸார் குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் சிறுவர் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அது ஆரோக்கியமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தையை குறித்த இடத்தில் போட்டு விட்டு சென்றவர்களை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.