முதலில் தூக்க மாத்திரை… அதன் பின் மின்சாரம்! காதலனுடன் சேர்ந்து கணவனை இரக்கமின்றி கொன்ற மனைவி!!

969

இந்தியாவில் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் மின்சாரம் பாய்ந்ததன் காரணமாக உயிரிழந்ததாக நம்பப்பட்ட 35 வயது மதிக்கத்தக்க நபரின் மரணத்தில், அவரது மனைவியே அவரை கொலை செய்து நாடகமாடியுள்ளது அம்பலமாகியுள்ளது.

ராஜஸ்தானின் Barmer மாவட்டத்தை சேர்ந்த Deengardh பகுதியில் பப்பு தேவி என்ற 30 வயது பெண் தன் கணவரான Manaram-வுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஜுன் மாதம் 15-ஆம் திகதி கணவரின் சகோதரருக்கு போன் செய்து, தன்னுடைய கணவர் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதாக கூறியுள்ளார்.

இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது, Manaram காலில் இரத்தம் இருப்பதைக் கண்டுள்ளனர்.


என்ன நடந்தது என்று குடும்பத்தினர் பப்பு தேவியிடம் கேட்ட போது, மின்சாரம் தாக்கிவிட்டதாக கூறியுள்ளார். அதன் பின் இது குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், பொலிசார் உடலை பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து, அதன் பின்னர் உடல் தகனம் செய்யப்பட்டது.

இருப்பினும் குடும்பத்தினருக்கு Manaram மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் இருந்ததால், பப்புதேவியிடம் அவர் மரணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

Manaram மரணமடைந்து 12 நாட்களுக்கு பிறகு பப்புதேவி குடும்பத்தினரிடம் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

அதில், தான் ஹனுமன்ராம் என்பவருடன் பழக்கம் வைத்ததிருந்ததாகவும், அதைப் பற்றி கணவருக்கு தெரிந்த்விட்டதால், காதலன் ஹனுமன்ராமுடன் சேர்ந்து திட்டம் திட்டியதாக கூறியுள்ளார்.

முதலில் தூக்க மாத்திரைகள் கொடுத்து, அதன் பின் அவர் மீது மின்சார கம்பியை வைத்து கொன்றதாக கூறியுள்ளனர். இதை ஹனுமன்ராமும் ஒப்புக் கொண்டதாவும், இறந்தவரின் சகோதரர் இருவர் மீதும் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.