மூளை நரம்புகளில் பாதிப்பு: பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் உடல்நிலை கவலைக்கிடம்!!

473

பாரதி பாஸ்கர்…

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

தனியார் வங்கியில் உயரதிகாரியாக பணிபுரிந்து வரும் பாரதி பாஸ்கருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை, பரிசோதித்த மருத்துவர்கள், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.


தீவிர சிகிச்சைப் பிரிவில் கண்காணிப்பில் இருந்து வரும் இவரது உடல்நிலை, சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாரதி பாஸ்கர் பூரண நலம்பெற பிரார்த்திப்பதாக பிரபலங்களும் பட்டிமன்ற ரசிகர்களும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.