யாத்திரை சென்ற இடத்தில் தொலைந்த வளர்ப்பு நாய்… 4 நாட்களுக்கு பிறகு வந்து சேர்ந்த அதிசயம்!!

186

தொலைந்து போன வளர்ப்பு நாய் 4 நாட்களுக்கு பிறகு சொந்தக்காரரிடம் வந்தடைந்துள்ளது. கர்நாடகா மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள நிப்பானி தாலுகாவில் உள்ள யமகர்னியைச் சேர்ந்தவர் ஞானதேவ கும்பரா என்பவர் புனித யாத்திரைக்காக தனது குடும்பத்தாருடன் சென்றுள்ளார்.

குறித்த யாத்திரைக்கு தனது வளர்ப்பு நாயான மகாராஜாவையும் அழைத்து சென்றுள்ளார். இந்த யாத்திரையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருவதால் கூட்டம் அதிகரிக்க வண்ணத்திலேயே இருந்துள்ளது.

இந்நிலையில் அலை மோதும் பக்தர் கூட்டத்தில் மகாராஜா தொலைந்து போய் உள்ளது. தொலைந்த நாளை குடும்பத்தின் பல இடத்தில் தேடி அலைந்துள்ளனர். ஆனாலும் நாயை கண்டுப்பிடிக்கவில்லை.

பின் மனதை தளர்த்திக்கொண்டு, யாத்திரை முடிந்து சொந்த ஊரிற்கு சென்றுள்ளனர். அன்றிலிருந்த 4 நாட்களுக்கு பின்னர் மகாராஜா, ஞானதேவ கும்பராவைத் தேடி வந்துள்ளது.

இதை பார்த்த குடும்பத்தினர் ஆச்சரியத்தில் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். சுமார் 195 கி.மீ தூரத்தில் தொலைந்த வளர்ப்பு நாய், தனது குடும்பத்தை தேடி வந்த செய்தி அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வளர்ப்பு நாயின் புகைப்படமும் ஞானதேவ கும்பரா என்பவரின் புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.