யானையை விரட்ட வைத்த மின் வயரைத் தொட்ட மாணவி : அடுத்து நடந்த சோகம்!!

9

வீட்டின் அருகே யானை வந்தால், அதை விரட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மின் விளக்கில் இருந்த வயரைத் தொட்ட மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே தாவரகரை கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(35).

விவசாயியான இவரது மகள் திவ்யாஸ்ரீ (10). மாணவி திவ்யாஸ்ரீ தாவரகரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர்களது வீட்டின் அருகே யானைகள் வந்தால் அவற்றை விரட்டுவதற்காக மின் விளக்கு அமைக்கப்பட்டு இருந்தது.

மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்த வயரில் ஒரு இடத்தில் வயர் துண்டாகி மின்கசிவு ஏற்பட்டுள்ள நிலையில், காலை திவ்யாஸ்ரீ கழிவறை சென்ற போது மின்வயரை தொட்டதில் திவ்யாஸ்ரீ உடலில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தார்.


இது குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாஸ்ரீயின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விட்டு, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.