லண்டனில் பரபரப்பான சாலையில் இரண்டு இளைஞர்கள் காரை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் பரபரப்பு மிகுந்த ஆக்ஸ்போர்டு தெருவில், கடந்த 22-ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி 6.45 மணியளவில் ஒரு பயங்கரமான தாக்குதல் சம்பவம் நடந்தது.
அதில், ஆயுதமேந்திய இரண்டு பேர், காரின் ஜன்னல்களை அடித்து நொறுக்க முயற்சிக்கின்றனர். வாகனத்தின் பின்புற ஜன்னல் ஏற்கனவே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே ஒருவர் இருந்துள்ளார்.
நடைபயிற்சிகு பயன்படுத்தப்படும் குச்சி மற்றும் இரும்பு கம்பிகளால் அந்த வாகனத்தை சுமார் 16 முறை அடித்து நொறுக்கிய நிலையில், பொலிஸ் வருவதைக் கண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
வாகனம் தெருவுக்குள் சென்ற போது, திடீரென்று இரண்டு பேர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். ஒரு பொலிஸ் வேன் வருவதைக் கண்டதால் அவர்கள் நிறுத்திவிட்டு ஓடிவிட்டதாக சம்பவத்தை கண்டவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று பெருநகர காவல்துறை செய்தித் தொடர்பாளர் மைலண்டனிடம் தெரிவித்தார். மேலும், ஆகஸ்ட் 22 சனிக்கிழமையன்று மாலை 6.48 மணியளவில், W1, ஆக்ஸ்போர்டு தெருவில் ஒரு இடையூறு மற்றும் குற்றச் சேதம் குறித்து பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் யாரும் கைது செய்யப்படவில்லை.
விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் அந்த நபர்களை அடையாளம் காணும் வகையில் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் காவல்துறைக்கு உதவும் படி தரக்கூறிய தகவல்கள் இருந்தால், உடனடியாக தெரிவிக்கும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.